search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி பறிமுதல்"

    • ராஜபாளையம் அருகே 920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அடிக்கடி நடந்து வரு கிறது. குறிப்பாக மாவட்ட எல்லை அருகில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் முழுமையான பலன் இல்லை.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் பகுதியில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அப்போது அங்குள்ள தனியார் நிலத்தில் 23 மூடைகளில் 920 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத் திருப்பது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (33), லோடுமேன் கல்யாணசுந்தரம் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ரேசன் அரிசியை ஆலைகளில் பாலீசு செய்து வெளிமார்க்கெட்டுகளில் அதிக விலையில் விற்க பதுக்கி வைத்திருந்தார்களா? அல்லது கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு கடத்திய 35 மூடை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அருப்புக் கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி 35 மூடைகள் ரேஷன் அரிசி இருந்தது. வேனில் வந்தவர் களை விசாரித்தபோது அவர்கள் கடலாடி தொண்டு நல்லம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது18), மதுரை பெருங்குடியைச் சேர்ந்த லோடுமேன் ஜோதிமுத்து (28) என்பது தெரியவந்தது.

    மேலும் அருப்புக் கோட்டை அருகே உள்ள கே.எம்.கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேருக்கு சொந்தமான இடத்தில் இருநது மதுரை வில்லா புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. வேனுடன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டிரைவர், லோடுமேனை கைது செய்தனர்.

    மேலும் சந்திரசேகர், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 50 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
    • லாரிகளை ஓட்டி வந்த பெருமாள், ஜானகி ராமன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    சோழவரம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம், நகரிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இன்று காலை திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 50 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து லாரிகளை ஓட்டி வந்த பெருமாள், ஜானகி ராமன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரேசன் அரசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து ரெயில் மூலம் ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது ரெயில்நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 23 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மொத்தம் 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதனை மர்ம நபர்கள் ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றபோது போலீசாரின் கண்காணிப்பால் ரெயில் நிலைய நடைமேடையில் போட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. ரேசன் அரசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆர்.எஸ்.மங்கலம் அருகே 1800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப் படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் கோகிலா தலைமையில் அதிகாரிகள் சிலுக வயல் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்ட போது 50 கிலோ எடையுள்ள 36 பிளாஸ்டிக் பையில் 1800 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி டிரைவர் பார்த்திபனூர் பெருங்கரையை சேர்ந்த பாலமுருகன்(27) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீடுகளில் ரேசன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கடத்தி செல்வதாக கூறினார். இது தொடர்பாக குற்றப்பு லனாய்வு பிரிவு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 1800 கிலோ ரேசன் அரிசி திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    • அதிகாரிகள் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கோழிப்பண்ணை உரிமையாளர் முருகனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
    • அதிகாரிகள் கோழி பண்ணை உரிமையாளர் முருகனை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது.

    இந்த பண்ணையில் இன்று அதிகாலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக பறக்கும்படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார், வருவாய் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட பறக்கும் படை குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அங்கு உள்ள அரவை மில்லில் மூட்டை மூட்டையாக 2 ஆயிரத்து 400 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் இந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கோழிப்பண்ணை உரிமையாளர் முருகனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கோழிகளுக்கு தீவனமாக அரைத்து வழங்க ரேசன் அரிசியை முறைகேடாக கொண்டு வந்து பண்ணையில் உள்ள அரவை மில்லில் சேமித்து வைத்திருந்தார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் கோழி பண்ணை உரிமையாளர் முருகனை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 2½ டன் ரேசன் அரிசியும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில், 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.
    • அரிசி கடத்தல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் உள்ள சேலம் சாலை சாமுண்டீஸ்வரி திருமண மண்டபம் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுகுமார் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள தனியார் கட்டட குடோனில் சோதனையிட்டபோது, 50 கிலோ அளவிலான, 42 மூட்டைகளில், 2ஆயிரத்து 100 கிலோ ரேசன் அரிசி பதுக்கியிருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    அதேபோல திருவண்ணாமலை சாலை, அரசு நகர்புற சுகாதார நிலையம் அருகில் ஒரு வீட்டில், 50 கிலோ அளவிலான, 10 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரிசி கடத்தல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    • போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை மண்டல பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தார் இந்துமதி ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக காஞ்சிபுரம் - வேலூர் சாலை கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    இது சம்பந்தமாக தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தபோது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் 216 மூட்டை ரேசன் அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.அதனை பறிமுதல் செய்தனர்.

    ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.
    • தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு-கோவில்பட்டி சாலையில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆல்பின் பிரிட்ஜ் மேரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் கந்தசுப்பிரமணியன்:-

    பூலையா நாகராஜன் உள்ளிட்டோர் கயத்தாறு-கோவில்பட்டி பைபாஸ் சாலையில் சவலாப்பேரி ஊருக்கு மேற்கு பகுதியில் ஹரிஹரன் என்பவர் தோட்டத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த வெள்ளானகோட்டை கீழத்தெருவை சேர்ந்த உச்சிமாகாளி(வயது 40) என்பவரை பிடித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அரிசி மூட்டைகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது 40 கிலோ எடை கொண்ட 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவர் ஏற்பாட்டில் உச்சிமாகாளி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து 3 டன் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா மாநிலத்துக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜன், செந்தட்டி அய்யன் ஆகியோர் புதூர் பாண்டியாபுரம் விலக்கு பாலம் அருகே சந்தேகப்படும்படியாக வந்த வானத்தை சோதனை செய்தபோது அதில் 30 மூட்டைகளில் 900 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி பி அன்ட் டி காலனியை சேர்ந்த காந்திசங்கரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா நகர் 9-வது தெருவை சேர்ந்த அஜித்குமாருடன் சேர்ந்து பன்றி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அஜித்குமாரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • ஒரு வாகனத்தில் ரேசன் அரிசி மூடைகள் கடத்திச் செல்லப்பட்டது அறிந்து அதனை தடுத்து நிறுத்தினர்.
    • அரிசி மூடைகளை கடத்தி வந்த வாகனத்தையும் பிடித்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பறக்கும்படை அலுவலர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். கம்பம் மெட்டு அருகே ஒரு வாகனத்தில் ரேசன் அரிசி மூடைகள் கடத்திச் செல்லப்பட்டது அறிந்து அதனை தடுத்து நிறுத்தினர்.

    ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் அதி வேகத்தில் சென்றனர். இருந்தபோதும் அதிகாரிகள் துரத்திச் சென்று வாகனத்தை பிடித்தனர். அதில் 2050 கிலோ பொது வினியோக திட்டத்துக்கான ரேசன் அரிசி மூடைகள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த ரேசன் அரிசி மூடைகளை கைப்பற்றினர். மேலும் அரிசி மூடைகளை கடத்தி வந்த வாகனத்தையும் பிடித்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். வாகனத்தில் வந்த 3 பேர் தப்பி ஓடியதால் அவர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் இந்த அரிசி மூடைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 500 கிலோ சிக்கியது
    • உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் வெளிமாநிலங்களுக்கு ரெயில் மூலம் ரேசன் அரிசி கடத்த இருப்பதாக மாவட்ட உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கும், ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சோம நாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள முள் புதரில் ேரசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து 500 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை திருப்பத்தூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ×